• Breaking News

    10 நிமிடங்கள் ”ஜிம்” இயந்திரத்துக்குள் சிக்கித்தவித்த 4 வயது சிறுமி...!

     


    துபாயின் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள “ஜிம்“ இயந்திரத்தில் ஏற்பட்ட விபத்தில் 4 வயதான சிறுமி ஒருவர் சிக்கி கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்

    இதனையடுத்து அவர் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரயா பிரவுன் என்ற சிறுமி ஜிம் இயந்திரத்தில் இருந்து மீட்கப்பட்டபோது இயந்திரத்தின் பின்பகுதியில் சிக்குண்டு வெளியேறமுடியாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    சிறுமியின் கைகளும் கைகளும் இயந்திரத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருந்தன. பின்பக்க “பெல்ட் ரோலர்” பகுதியில் சிறுமியின் கழுத்து தள்ளப்பட்டிருந்தது.

    இதன்போது அவரின் தந்தையான அலெக்ஸ் பிரவுன், இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்தியபோதும் தமது மகளை இயந்திரத்தில் இருந்து வெளியே இழுக்க போராடிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    சுமார் 10 நிமிடங்கள் வரை அவர் இயந்திரத்துக்குள் சிக்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயந்திரத்திலிருந்து தமது மகளின் கைகளை விடுவிப்பதில் தந்தை கவனம் செலுத்தியபோது, மகளின் கழுத்து சுருக்கப்பட்டிருப்பதையும் அவள் மூச்சுவிட சிரமப்படுவதையும் கண்டுள்ளார்.



    இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நரயா பிரவுன் நான்கு நாட்களில் இயல்புக்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad