பாகிஸ்தானில் இலங்கை பிரஜை எரித்துக் கொலை - சூத்திரதாரி உட்பட 100 ற்கும் மேற்பட்டவர்கள் கைது...!
இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை ஒரு கும்பலால் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் "அவமானத்தின் நாள்" என்று வர்ணித்தார்.
தொழிற்சாலையின் தொழிலாளர்கள் வெளிநாட்டவரை கடுமையாக தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஊழியர்கள் தொழிற்சாலையை சேதப்படுத்தி, போக்குவரத்தை தடுத்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை