13 தங்கப்பதகங்களை வென்ற தமிழ் மாணவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராட்டு!
தேசிய ரீதியில் மருத்துவதுறையில் அதிக தங்கப்பதக்கங்களைப்பெற்று சாதணை படைத்த அக்கரைப்பற்றை சேர்ந்த மாணவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று வாழ்த்துதெரிவித்து பாராட்டி கௌரவித்தனர்.
கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றை சேர்ந்த தமிழ் மாணவியான தணிகாசலம் தர்ஷிகா என்ற கொழும்பு பல்கலைக்கழக மாணவி மருத்துவத்துறை இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று தேசிய ரீதியான சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
நேற்றைய தினம் அவரது வீட்டிற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ஆகியோர் பாராட்டி கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் ஜெயசிறில், தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை