16 வயது மகனின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத தந்தையும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு...!
டெங்கு காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த தனது 16 வயது மகளின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பலகத்துரே பகுதியை சேர்ந்த 47 வயதான நிஷாந்த டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த தளுவகொடுவ புனித அன்னாள் கல்லூரியின் மாணவரான நெல்கா சில்வா காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் திகதி உயிரிழந்துள்ளார். பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரது தந்தையும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கருத்துகள் இல்லை