• Breaking News

    'பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்வேன்’ வெளியான காணொளியினால் பரபரப்பு!

     


    பிரித்தானிய மகாராணியை கொல்லும் எண்ணத்தில் ஆயுதத்துடன் விண்ட்ஸர் கோட்டைக்குள் நுழைய முயன்ற நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

    ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 102 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த படுகொலைக்கு பழிக்குப்பழியாக பிரித்தானிய ராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக நபர் ஒருவர் வெளியிட்ட காணொளியினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த காணொளியில், முகமூடி அணிந்துகொண்டு பேசும் அந்த நபர் தனது பெயர் ஜஸ்வந்த் சிங் சைல் என்றும், தான் இந்திய சீக்கியர் என்றும் அடையாளப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    தொடர்ந்து பேசும் அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்கு பழியாக ராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்வேன் என்று கூறியுள்ளார்.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராணி 2-ம் எலிசபெத் தங்கியிருக்கும் வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதத்துடன் ஊடுருவிய 19 வயது வாலிபரை பொலிஸார் கைது செய்த நிலையில், தற்போது இந்த காணொளி வெளியாகியுள்ளது.


    இந்நிலையில், முதல் முறையாக கோட்டையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad