உலக தரிசனம் நிறுவனம் அராலியில் 2022ம் ஆண்டு மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்...
உலக தரிசனம் நிறுவனத்தினால் 2022ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள உதவித்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (09) அராலி மேற்கு, ஜே/160 கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மக்களது வாழ்வாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றினை முன்னேற்றக் கூடிய வினைத்திறனான செயற்றிட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் வலி.மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் க.இலங்கேஸ்வரன், உலக தரிசனம் நிறுவனத்தின் சங்கானை பிரதேசத்துக்கான இணைப்பாளர் வசந்தன், அராலி மேற்கு கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், உலக தரிசனம் நிறுவன பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை