• Breaking News

    விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022”

     


    யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளது.

    யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

    இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழு ஆதரவை வழங்குவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் யாழ். வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டத் திருவிழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad