4 வயது குழந்தைக்கு எமனான ஏணை கயிறு...!
வவுனியா - அண்ணாநகர் பகுதியில் ஏணைக் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை பலியாகியுள்ளது.
குறித்த குழந்தை ஏணையில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில் குழந்தை பலியாகியுள்ளது.
எனினும் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்கு வயது குழந்தையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை