கைதி ஒருவரின் வயிற்றில் இருந்து 56 கிராம் வெள்ளி நகை மீட்பு...!
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவரின் வயிற்றில் இருந்து 56 கிராம் வெள்ளி நகை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைதி நகையை விழுங்கியதாக கூறப்பட்ட நிலையில், கைதியை மலம் கழிக்க வைத்து நகையை மீட்டுள்ளனர்.
இதன்போது நீல நிற கார்பன் பேப்பரில் சுற்றப்பட்டு, வெள்ளை பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையில் நகை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுகேகொட – மிரிஹான பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரின் வயிற்றிலிந்தே நகை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரிடமிருந்து ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை