யாழ். தொல்புரத்தில் 7 1/4 பவுண் நகை திருட்டு - சந்தேக நபரைத்தேடி பொலிஸார் வலைவீச்சு
இன்று (29) பி.ப 2 மணியளவில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த 7 1/4 பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் வசிக்கும் நபர் சாரதியாக பணிபுரிகின்றனர். இந்நிலையில அவர் இன்று வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.
அவரின் தாயார், மகனின் மனைவியை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றிருந்தார்.
அதன்பின்னர் அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் அந்தப்பெண்ணிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு "உங்கள் வீட்டில் நாய் குரைத்தது. ஆகையால் நாங்கள் உங்களது வீட்டை பார்த்தபோது இருவர் உங்களது வீட்டிலிருந்து வெளியே ஓடினர்" என்று கூறினர்.
இதனைக்கேட்ட அந்தப்பெண் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உடைத்து நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து வீட்டுக்காரர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.
திருடர்களை பிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை