• Breaking News

    விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 74 வயது மூதாட்டி...!


     புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகளான லாரா ஷெப்பர்ட் (74வயது) உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பியுள்ளனர்.

    அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் கடந்த யூலை மாதம் தனது நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் விண்கலத்தின் மூலம் ‌ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று வந்தார். இது மிகப்பெரும் மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது.

    இந்தநிலையில் லாரா ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேரை கொண்ட குழு புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியது. இந்த பயணம் சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்தது. நியூ ஷெப்பர்ட் விண்கலம் 100 கிலோமீட்டர் உயரம் வரை பயணித்தது. அதன் பின்னர் அந்த விண்கலம் மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது.

    லாரா ஷெப்பர்ட்டின் தந்தையான ஆலன் ஷெப்பர்ட் கடந்த 1961-ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி புளோரிடா மாகாணத்தில் இருந்து மெர்குரி விண்கலத்தில் விண்வெளிக்கு பயணித்த அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் என்கிற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad