8 வயது பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 72 வயது கலைஞர் கைது...!
மொனராகலை, மாறாவ பிரசேத்தில் விகாரையொன்றில் வைத்து எட்டு வயதுடைய பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 72 வயதான கலைஞர் ஒருவர் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை – வெலியாய பகுதியைச் சேர்ந்த ஓவியர், ஓவியங்கள் வரைவதற்காக கோவிலுக்கு வந்திருந்த நிலையில், விகாரையின் மூத்த பிக்குகள் இல்லாத நேரத்தில் குறித்த சிறு வயது பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் துஷ்பிரயோகத்துக்குள்ளான பிக்கு மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், மொனராகலை தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை