• Breaking News

    கனடா செல்ல முயற்சித்த யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது...!

     கனடா செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    போலி ஆவணம் மூலம் தயாரிக்கப்பட்ட கனடா விசாவை பயன்படுத்தி ஐக்கிய அரபு எமீரகத்தின் டுபாய் ஊடாக கனடாவிற்கு செல்ல முயற்சித்த இலங்கை இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

    நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

    கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் நேற்று அலை 2.55 மணிக்கு செல்லும் விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

    டிக்கட் பெறுவதற்காக கவுண்டரிற்கு வந்த போது அவர் சமர்ப்பித்தது கனடா நாடு விசாவில் உள்ளடக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தொடர்பில் விமான நிலைய அதிகாிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    அதற்கமைய இது தொடர்பில் மேற்கொள்ளபட்ட விசாரணைகளில் குறித்த நபர் வழங்கிய விசா ஆவணங்களில் இருந்த தகவல் முழுமையாக போலியானதென தெரியவந்துள்ளது.

    அதற்கமைய இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad