யாழில் மின்சார நிலையத்தின் இரும்புகளை திருடி விற்பனை செய்த இராணுவ வீரர்...!
மின்சார நிலையத்தில் இருந்த பழைய இரும்புகளை திருட்டுத்தனமாக விற்பனை செய்த இராணுவ வீரரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சுன்னாகம் மின்சார நிலையத்திற்கு கடந்த காலங்களில் இருந்து இராணுவத்தினரே பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர், திருட்டுத்தனமாக மின்சார நிலையத்தில் இருந்த பழைய இரும்புகளை வீதியால் சென்ற இரும்பு வியாபாரிக்கு விற்பனை செய்துள்ளார்.
பழைய இரும்புகள் திருட்டு போன சம்பவம் தொடர்பில் மின்சார சபையின் அதிகாரிகளால் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசாரணைகளை மேற்கொண்டிருந்த சுன்னாகம் காவல்துறையினர், கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரை நேற்று கைதுசெய்துள்னர்.
காங்கேசன்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா அவர்களின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியபோது,எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை