• Breaking News

    தேனிலவுக்கு பதிலாக சுடுகாட்டுக்கு சென்ற தம்பதி...!


     திருமணமான மறுநாளே தேனிலவுக்குப் பதிலாக கல்லறைக்கு வந்த கணவன் - மனைவி ஆகிய இருவரும் ஒரே நாளில் 15 பேரை தகனம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    இந்த புதுமணத்தம்பதியினர், .கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை மயானத்துக்கு சென்று நிறைவேற்றினர்.

    மலேசியாவை சேர்ந்த 34 வயதான முஹம்மது ரிட்ஜீவன் ஒஸ்மான் மற்றும் அவரது மனைவி நூர் அஃபிஃபா ஹபீப் ஆகியோர் கடந்த டிசம்பர் 13 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

    இதன் பின்னர் அவர்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்குச் செல்வதற்குப் பதிலாக, கொரோனா முன்களப் பணியாளராக மாற முடிவு செய்தனர்.

    மணமகன் ரிட்ஜீவன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

    இந்தநிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே, கொரோனா நோயாளி இறந்த பிறகு, அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று குழுவிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ரிட்ஜீவன் கூறினார்.

    இதனை தாம் தமது புது மனைவியிடம் கூறியபோது அவரும் கணவருடன் செல்ல ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து புதுமணத் தம்பதியினர் உடனடியாக கல்லறைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடலங்களை தகனம் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad