யாழில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களின் 3 ஆயிரம் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இன்றைய தினம் ஒரு பவுண் தங்கம் (22 கரட்) ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக பதிவாகியிருந்தது. 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் டொலருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தங்க இறக்குமதியும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை