காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் அப்புத்துரை தெரிவு!
காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவைச் சார்ந்த மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற தவிசாளர் தெருவில் சுயேட்சைக்குழுவைச் சார்ந்த செயற்குழு உறுப்பினர் யோகநாதன் முன்மொழிய தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த விஜயராஜா வழிமொழிந்தார்.
இதனை அடுத்து வேறு எந்த முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கபடாத நிலையில் சுயேட்சைகுழுவைச் சேர்ந்த மயிலன் அப்புத்துரை ஏகமனதாக தவிசாளராக தெரிவு செய்யப்படுவதாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அறிவித்தார்.
மேலும் இன்றைய சபை அமர்வில் இன்றைய தவிசாளர் தெரிவில் சுயேட்சைகுழுவைச் சார்ந்த மூன்று உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த மூன்று உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சார்ந்த ஒரு உறுப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த இரண்டு உறுப்பினர்கள் இன்றைய தவிசாளர் தெரிவில் கலந்துகொள்ளவில்லை.
கருத்துகள் இல்லை