• Breaking News

    வவுனியாவில் ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு...!

     


    வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இன்று மாலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயில் வவுனியா - ஈரற்பெரியகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தவேளை குறித்த நபர் மீது மோதியதால் அவர் இவ்வாறு உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவத்தில் வவுனியா - தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா ரவி (வயது 55) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad