• Breaking News

    கைதான தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்ததா சிறிலங்கா கடற்படை? வெடித்தது சர்ச்சை...!


     எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் கிருமிநாசினி தெளித்தது மனித உரிமை மீறல் என தேசிய மீனவர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

    கடந்த மூன்று தினங்களாக இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 68 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறிலங்கா கடற்படையினர் நெடுந்தீவு, எழுவைதீவு உள்ளிட்ட கடற் பகுதியில் வைத்து மீனவர்களை கைது செய்து விசாரணைக்காக மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் மற்றும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பின் மீனவர்கள் உடல் முழுமையாக கிருமிநாசினி தெளித்த பின்னரே கடற்படை முகாமில் இருந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.

    இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகள் வெளியானதையடுத்து தேசிய மீனவர் பேரவை மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பது மனிதநேயமற்ற செயல் இது மனித உரிமை மீறல் எனவே சிறிலங்கா கடற்படையினர் இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

    இது குறித்து சிறிலங்கா கடற்படை அதிகாரிகளிடம் கேட்டபோது, வினவியபோது இலங்கையில் ஒமிக்ரோன் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதுடன், நோய் தொற்றால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.எனவே, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நபர்கள் அனைவரையும்,இலங்கைக்குள் அனுமதிக்கும் போது அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை செய்வது வழக்கம்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மட்டுமே இது செய்யபப்டுகிறது. இது மனித உரிமை மீறலாக கருதப்படாது.

    நாங்கள் யாரையும் புண்படுத்தம் நோக்கத்துடன் இதனை செய்யவில்லை, அலுவலகத்திற்குள் நுழையும் போது கைகளுக்கு கிருமி நாசினி கொடுப்பது போல் தான் இது உடல் முழுவதும் அடிக்கப்படுகிறது,இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடானது அல்ல, அதே போல் முகங்களில் இந்த கிருமி நாசினி அடிப்பதில்லை, கிருமி நாசினி தெளிக்கப்படதுடன், மீனவர்களை நல்ல தண்ணீரில் குளிக்க வைத்து விடுகிறோம். என தெரிவித்துள்ளனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad