பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை துஷ்பிரயோகம் செய்த பொறுப்பதிகாரி கைது!
புதிதாக பொலிஸ் சேவையில் இணைந்துக்கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை மாவட்டம் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே இவ்வாறு விசாரணைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிலையத்திற்குள், பொறுப்பதிகாரி, பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்சாவின் ஆலோசனைக்கு அமைய சம்பவம் குறித்து விசேட பொலிஸ் குழு நடத்திய விசாரணைகளை அடுத்தே பொறுப்பதிகாரி கைது சய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று மாத்தறை நீதவான் முன்னிலையில் நிறுத்தப்படவுள்ளார்.
கருத்துகள் இல்லை