முழு நாடும் இருளில் மூழ்கும்! மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை...!
மின் உற்பத்தி நிலையங்களில் சேவையாற்றும் பொறியியலாளர்கள் கடமையில் இருந்து விலகிக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நடவடிக்கை கட்டமைப்புகளில் சேவையாற்றும் பொறியியலாளர்கள் நேரடி அட்டவணைக்கு அமைய கடமையாற்றுகின்றனர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக அவர்களை கடமைகளில் இருந்து விலகிக்கொள்ள உள்ளதாக பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை படிப்படியாக தீவிரப்படுத்தப்படுவதுடன் இறுதியில் பணிப்புறக்கணிப்பை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டால், முழு நாடும் இருளில் மூழ்கும் எனவும் குமாரவடு குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை