காதலிக்க மறுத்த. யுவதியை பெற்றோல் ஊத்தி எரித்த இளைஞன்...!
காதலிக்க மறுத்த பெண்ணை பொது இடத்தில் பெற்றோல் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டு, தனக்குத்தானே தீமூட்டி இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் காலை இந்தியா - கேரளாவின், கோழிக்கோடு- திக்கொடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கிருஷ்ணபிரியா, திக்கொடி ஊராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரமாகத்தான் அவர் பணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் திக்கோடி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு காலை 9.50 மணியளவில் கிருஷ்ணப்ரியா (வயது 22) என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு, நந்தகோபன் (வயது 28) என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில் நந்தகோபன் 60 சதவீத தீக்காயத்துடன், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்த நந்தகோபன், நீண்ட நாட்களாக கிருஷ்ணபிரியாவை தன்னை காதலிக்குமாறு துன்புறுத்தி வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ,இந்த கொடூர சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை