வங்காள விரிகுடாவில் சூறாவளி உருவெடுக்கும் சாத்தியம்...!
மத்திய வங்காள விரிகுடாவில் சூறாவளி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ளது.
இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்து.
இதனால், ஆழம் கூடிய மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்” என்றுள்ளது.
கருத்துகள் இல்லை