• Breaking News

    குறிஞ்சாக்கேணி படகு விபத்து - மேலும் ஒரு குடும்பப்பெண் உயிரிழப்பு...!

     திருகோணமலை - குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கிய மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.

    கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

    இவ்வாறு உயிரிழந்த பெண் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சக்கரிய்யா காலிஸா (42வயது) என பொலிசார் தெரிவித்தனர்.

    கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி குறிஞ்சாக்கேணி இழுவை படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய நிலையில் படுகாயமடைந்த பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக கனவிலிருந்து திருகோணமலைக்கும் திருகோணமலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

    இதேநேரம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad