விவாதப் போட்டியில் முதலிடம் பெற்ற யாழ். வலி. தென்மேற்கு பிரதேச சபையின் போட்டியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு...!
இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பு இலங்கை மன்ற பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற குறித்த விவாத போட்டியில், முதலாம் இடத்தினை வலிகாமம் தென்மேற்கு - மானிப்பாய் பிரதேச சபையின் விவாத அணி பெற்றுக்கொண்டது.
அதேவேளை இரண்டாமிடத்தினை மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபை பெற்றதுடன் மூன்றாமிடத்தினை புதுக்குடியிருப்பு பிரதேசபை பெற்றுக்கொண்டது.
முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட மானிப்பாய் பிரதேசசபையின் விவாதகுழுவில் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், உறுப்பினர்களான அருட்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ, கந்தையா ஜெசிதன் , லோகப்பிரகாசம் ரமணன் , சிவசண்முகநாதன் அனுசன் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
அணியின் தலைவராக உறுப்பினர் கந்தையா ஜெசிதன் செயற்பட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை