• Breaking News

    மட்டக்களப்பில் கிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை - பீதியில் மக்கள்!

     


    மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிர்காமர் வீதி கிராமத்திற்குள் புகுந்த முதலையொன்றைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

    மட்டிக்களி - கதிர்காமர் வீதியில் இன்று(25) அதிகாலை 4.30 மணியளவில் உலாவிய குறித்த முதலையைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.


    இதனைத்தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகைதந்த கல்லடி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த முதலையைப் பாதுகாப்பாக மீட்டு செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகாமையிலுள்ள குளம் ஒன்றில் விடுவித்ததாகத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


    சுமார் 07 அடி நீளத்தினைக்கொண்ட குறித்த முதலை குறித்த கிராமத்திற்கு அருகாமையிலுள்ள தோனா (நீர்நிலை) பகுதியிலிருந்து வந்திருக்கலாமென அப்பகுதி மக்கள் தெரிவித்ததுடன், அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் அதனைப் பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்ததுடன், அப்பகுதியில் அச்சநிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad