வட்டுக்கோட்டையில் பாரதியின் உருவச்சிலை திறப்பு...!
இன்றையதினம் (11.12.202) வட்டுக்கோட்டை - குக் ரோட் முதலாம் ஒழுங்கையில் பாரதியாரின் உருவச்சிலை திறந்துவைக்கும் நிகழ்வு காலை பதினொரு மணியளவில் இடம்பெற்றது.
மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக சிலையினை திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார். இதன்போது சிறுவர்களால் பாரதியாரின் பாடல்களும் பாடப்பட்டன.
கலாநிதி சிதம்பரமோகன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், மறவன்புலவு சச்சிதானந்தம், பால குமார சர்மா குருக்கள், யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.பாலசுந்தரம்பிள்ளை, வண மீஹ சந்துர விமல தேரர், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சுமன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாரதியாரின் நற் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வண்ணமாக குறித்த உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை