சீன தூதுவருக்கு பனை மரத்தை காட்டிய அமைச்சர் டக்ளஸ்...!
வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ். மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் அரியாலை கடலட்டை பண்ணை க்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சீன தூதுவருக்கு, கடலட்டை பண்ணையில் நின்ற பனை மரத்தினை காட்டி இதுதான் “பல்மேறா” என தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார்.
இதில் அற்ககோல் கிடைக்கும் என சைகை மூலம் காண்பித்து இது உடம்புக்கு கேடு விளைவிக்காது என விளங்க படுத்தியபோது தூதுவர் அதற்கு சரி சரி என்பது போல் தலையசைத்தார்.
கருத்துகள் இல்லை