முல்லைத்தீவு கடற்கரையில் பறக்கும் சிவப்பு கொடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை...!
முல்லைத்தீவில் கடற்பரப்பில் கொடிகம்பங்கள் பலவற்றில் சிகப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
கடந்த 05ஆம் திகதி அன்று முல்லைத்தீவு கடலில் நீராடிக்கொண்டிருந்த வவுனியாவினை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் விடுமுறைநாட்களில் வெளியிடங்களில் இருந்து வரும் பல இளைஞர் யுவதிகள் கடலில் இறங்கி நீராடி வருகின்றமை வழக்கம்.
அபாய கடல் பகுதி என்ற எச்சரிக்கை பதாதைகள் சில இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதும் முல்லைத்தீவு கடல் தொடர்பில் சுற்றுலாவிற்கு வரும் மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த ஆண்டுகளுக்கு முன்னைய ஆண்டுகளில் கடலில் குழிக்க சென்ற சிலர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே பொதுமக்கள் குறித்த கடல் பகுதியில் இறங்குவதை தவிர்ககுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை