மாமனார் கொலை - காவல்துறை உத்தியோகத்தர் கைது...!
தனது மாமனாரை தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை,கொஹொலான ஹெட்டிகொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவருக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்த பகை நேற்றுமுன்தினம்(04) கைகலப்பாக மாறியதாகவும் இதில் சந்தேகநபரான காவல்துறை உத்தியோகத்தர் தனது மாாமனாரை தாக்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதனையடுத்து 72 வயதான மாமனார் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடரபில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை