வாழ்நாள் ஊடகவியலாளர் கானமயில்நாதனுக்கு வட்டு இந்துவில் அஞ்சலி
வாழ்நாள் ஊடகவியலாளரான வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கானமயில்நாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (30) பி.ப. 3.30 மணியளவில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பண்டிதரும் ஊடகவியலாளருமான கடம்பேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், ஆறு. திருமுருகன், முன்னாள் வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தணிகாசலம், ஊடகவியலாளர்கள், மதருகுமார் அன்னாரின் உறவினர்கள், ஊடகக்கற்கை ஆசிரியர்கள், ஊடகத்துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை