கஜேந்திரகுமார் எம்.பியால் சிறுவர் பூங்காவுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு...!
யாழ். மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபரது கோரிக்கைக்கு அமைவாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியில் மாதகல் விக்னேஸ்வரா பாடசாலைக்கு சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்றையதினம் குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்து இதனை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை