வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்...!
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான் மூன்றாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 அளிக்கப்பட்டிருந்தன.
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நவம்பர் 13ம் திகதியிலிருந்து நவம்பர் 22ம் திகதி வரை வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு, 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாதீட்டுக்கு ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை