கிளிநொச்சியில் மேட்டுநில பயிர்ச்செய்கை விசமிகளால் சேதம்!
கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் சுமார் 5 ஏக்கர் பரப்பிலுள்ள மேட்டுநில பயிர்ச்செய்கை விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள விவசாயி சுமார் 5 ஏக்கர் அளவால் மேட்டுநில பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகின்றார்.
தக்காளி, கறிமிளகாய், பச்சை மிளகாய் தென்னை போன்ற பயிர்களை தற்பொழுது பலன்தரக்கூடிய நிலையில் காப்படுகின்ற நிலையில், அவை விசமிகளால் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காளிக கொட்டகை அதிலிருந்த நீர் இறைக்கும் இயந்திரம், கிருமிநாசினி விசிறும் இயந்திரம், பசளை என்பவை அழிக்கப்பட்டுள்ளன.
வனவள பிரிவானருக்கு சொந்தமான எல்லைக்கற்கள் பலவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மிக அதிகவிலைக்கு கிருமிநாசினி மற்றும் உரம் என்பவனவற்றை கொள்வனவு செய்து பயிர்ச்செய்கை மேற்கொண்டுவரும் நிலையில் இந்த செயல் மிக அதிகமாக மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் காவல் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கவல்துறையினர் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை