• Breaking News

    கடற்படையினரின் படகு கவிழ்ந்தது நாயாற்றில்...!

     


    நாயாறு கடற்படை முகாமிலிருந்து கடலுக்குச் சென்ற கடற்படை படகு நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கடற்சீற்றம் காரணமாகக் கவிழ்த்துள்ளது.

    சட்டவிரோத மீன்பிடி படகுகளைக் கண்காணிக்கவென கடலுக்குச் சென்ற குறித்த கடற்படை படகு கடற்சீற்றம் காரணமாகக் கவிழ்த்துள்ளது.

    இந்த படகில் மூன்று கடற்படையினர் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்ததும் ஒருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ளதோடு மற்றைய இருவரும் வேறொரு படகொன்றின்மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

    குறித்த கவிழ்ந்த படகு கடற்படையினர் மற்றும் கிராம மீனவர்களின் ஒத்துழைப்புடன் கரைக்குக் கொண்டுவர முயற்சி செய்யப்பட்ட போதும் கடற்படை படகு சிதைந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad