ஊர்காவற்துறை கடலில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு...!
இன்று காலை, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு கடலில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலம் தண்ணீரில் மிதந்துவந்து கரையொதுங்கியுள்ளது.
நயினாதீவு, ஜே/34 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் நடராசா தர்மபாலன் என்ற 58 வயதுடைய குடும்பஸ்தருடைய சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 9.12.2021 அன்று வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை