• Breaking News

    குடும்பப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குடும்பஸ்தர் - வலைவீசும் கொடிகாமம் பொலிஸார்...!

     கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவருக்கு, அவரது அயல் வீட்டில் உள்ள குடும்பஸ்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

    இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

    நேற்று மதியம் 12.30 மணியளவில் குறித்த குடும்பப்பெண்ணின் கணவரும் பிள்ளைகளும் வெளியில் சென்றிருந்தவேளை அயல்வீட்டில் உள்ளவர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் முரண்பட்டார்.

    அதன்பின்னர் குறித்த. சந்தேகநபர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் குறித்த பெண்ணினால் இன்று கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் கொடிகாமம் பொலிஸார் அவரைத்தேடி வலைவீசி வருகின்றனர். 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad