மறு அறிவித்தல் வரை ஊரடங்கு!! முடங்கியது இந்திய தலைநகர்
இந்திய தலைநகர் புதுடில்லியில் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு, நேற்று (27) முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை இரவு நேரத்தில் நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறக்கிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ள நிலையிலேயே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை