• Breaking News

    பளை - முகமாலையில் வெடிபொருட்கள், மனித எலும்புக்கூடுகள் மீட்பு...!

     


    இன்று, பளை - முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின்போது, தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் வெடிபொருட்கள், மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மற்றும் ஆயுதத் தளபாடங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பாக பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிசாரால், நீதிமன்றத்தின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


    கிளிநொச்சி நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


    ஆர்பிஜி உந்துகணை செலுத்தி உட்பட வெடிபொருட்களும், விடுதலைப் புலிகளுடைய வரிச் சீருடை எச்சங்கள் மற்றும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அங்கு காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad