யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அதிரடியாக பணியிடை நீக்கம்!
யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றிரவு (30) மதுபோதையில் கடமையில் இருந்துள்ளார்.
இது தொடர்பாக காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை இன்று (31) பணியிடை நீக்கம் செய்தார்.
கருத்துகள் இல்லை