• Breaking News

    யாழில் உள்ள ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடியவர் வசமாக சிக்கினார்...!

     


    அண்மைய நாட்களில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் உள்ள இந்து ஆலயங்களில் 5 விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருடப்பட்ட 5 விக்கிரகங்களும் கைமாற்றப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

    டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் நேற்று 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன.

    இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

    இந்த நிலையில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

    அவரது அலைபேசியில், திருடப்பட்ட 5 விக்கிரகங்களின் ஒளிப்படங்களும் காணப்பட்டன. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேலும் 2 விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டன.

    அவை இரண்டும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. சந்தேக நபரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad