• Breaking News

    யாழில் மதுபோதையில் கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பணி நீக்கம்!

     கடமையின் போது போதையில் காணப்பட்ட கொடிகாமம் காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்  செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    குறித்த இருவரும் நேற்று நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட காவல்துறை பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து குறித்த இருவரிடமும் சாவகச்சோி காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    குறித்த விசாரணையில் குற்றம் உறுதியானமையால் இருவரும் மறு அறிவித்தல் வரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad