யாழ். மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
யாழ். மாவட்ட செயலகம்,மற்றும் அனர்த்த முகாமைத்துவ கிளை அலுவலகத்தின் எற்பாட்டில், ஆழிப்பேரலையின் உயிர்நீத்த உறவினர்களுக்கான 17 ஆவது ஆண்டு நினைவேந்தலுடனான அஞ்சலி நிகழ்வு இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ கிளையின் அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர் என். சூரியராஜ் தலைமையில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக தேசியக்கொடியினை மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் எற்றியதை தொடர்ந்து நினைவேந்தல் அஞ்சலியும் ஆத்மாசாந்தி ப்பிராத்தனையும் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ். மாவ்ட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர்கள் கலந்துகொண்டு உயிர் நீத்த உறவினர்களுக்கான அகல் தீபவொளி விளக்கெற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது சர்வமத தலைவர்களின் நினைவுச்சுடர்கள் எற்றியும் அவர்களுக்கான ஆத்மா சாந்திவேண்டி பிராத்தனையும் இடம்பெற்றது. இதில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ் முரளிதரன், அனர்த்த முகாமைத்துவ பதவிநிலை அலுவலகர்கள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை