வல்வை பட்டத் திருவிழா விவகாரம்: வரலாற்று தவறை இழைக்காதீர்! நாமல் உள்ளிட்டவர்களுக்கு ஜேர்மனியில் இருந்து வந்த எதிர்ப்பு
விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் வல்வையில் இடம்பெறவுள்ள பட்டத் திருவிழாவிற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, ஜேர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் வல்வை ஒன்றியம் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
தமிழின அழிப்பை நடாத்தியும் தமிழர்களது பூர்வாங்க நிலங்களை பறித்தெடுத்தும் எண்ணில் கணக்கற்ற தமிழர்களை பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் சிறையில் அடைத்தும் தனது அடக்குமுறை ஆட்சியை நடாத்தி வருகின்ற இலங்கை அரசின் அமைச்சரும், பிதமர் மகிந்த ராஜபக்சவின் மகனுமாகிய நாமல் ராஜபக்சவையும் இன அழிப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும் பட்டத்திருவிழாவிற்கு அழைப்பதானது எமது இனத்திற்கு இழைக்கும் வரலாற்று தவறாகும் என குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை