காரைநகர் பிரதேச சபையின் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்த த.தே.ம.மு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கம்...!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி, அவர்களும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் அவர்களும் உடனடியாகக் கட்சியை விட்டு நீக்கப்படுகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூலிலேயே இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.
காரைநகர் பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தமையாலேயே இவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை