• Breaking News

    மாதகலில் காணி சுவீகரிப்புக்கு எதிராக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்...!

     யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

    இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் மாதகல் காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து  கொண்டு காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

    நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே  போன்ற பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டது.

    போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசாரும் இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 








    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad