நல்லூர் வீதியில் சென்றுகொண்டிருந்த முதியவர் திடீரென கீழே விழுந்து மரணம்!
இன்று காலை 10.30 மணியளவில் நல்லூர் வீதியால் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு கீழே விழுந்து மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியவரின் மரணத்திற்கான காரணம் என்ன என இதுவரை கண்டறியப்படவில்லை.
யாழ்ப்பாணம் கந்தர்மடம் சேர்ந்த வைத்தியலிங்கம் செல்வரத்தினம் (வயது 67) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை