இலங்கைக்கு சீனாவின் மற்றுமொரு அன்பளிப்பு!
சீன மக்கள் குடியரசு சிறிலங்கா காவல்துறைக்கு 10 மோட்டார் சைக்கிள்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் Chi Shenhong, 10 GN 125 H மோட்டார் சைக்கிள்களை காவல்துறை மா அதிபர் விக்கிரமரத்னவிடம் கையளித்தார்.
சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த 10 மோட்டார் சைக்கிள்கள் எதிர்காலத்தில் 10 காவல் பிரிவுகளுக்கு கையளிக்கப்படவுள்ளன.
அண்மையில் வடக்கிற்கு விஜயத்தை மேற்கொண்ட சீனத்தூதுவர் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் உபகரணங்களை கைளயித்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை