ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வு...!
யுத்ததினால் காணாமல் போனவர்களின் உறவுகளுடனான கலந்துரையாடல், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது மகனை இழந்த தாய், கணவனை இழந்த மனைவி, பெற்றோரை இழந்த மகள், மகன் ஆகிய காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் "உங்களுக்கு தற்போது என்ன வேண்டும்" என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வினாவியபோது, காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தாருங்கள் என அழுதுகொண்டே கூறினர்.
குறித்த விசாரணை ஆணைக்குழு அவர்களினுடைய தற்போதய தேவைகளையும் கேட்டறிந்தனர்.
கருத்துகள் இல்லை