பிரதான வீதியில் தேங்கி நிற்கும் மழைநீர் - அந்தரிக்கும் காரை மக்கள்!
காரைநகர் - சக்களாவோடை பிரதான வீதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அந்தரிக்கின்றனர்.
பிரபல பாடசாலை மற்றும் சுற்றுலாமையமான கசூரினா கடற்கரைக்கு செல்லும் வீதியாக இந்த வீதி காணப்படுகின்றதுடன் இது பிரதான வீதியாகவும் காணப்படுகின்றது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்தரிக்கின்றனர். அப்பகுதி மக்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
காரைநகர் பகுதி மக்க மாத்திரமின்றி சுற்றுலாப்பயணிகள் வருகைதரும் வழியாகவும் இந்தப்பாதை காணப்படுகிறது. இவ்வீதியால் 782, 784 மற்றும் 785ம் இலக்க வழித்தட பேருந்துகள் பயணிக்கின்றன.
சுமார் 15 நாட்களுக்கு முதல் பெய்த மழைநீரே இன்னமும் வழிந்தோடவில்லை. மழைநீர் தேங்கி நிற்கும்போது வீதியில் உள்ள குன்று குழிகள் வெளியே தெரிவதில்லை. இதனால் விபத்துக்களும் சம்பவிக்கின்றன.
வீதியை புனரமைப்பதற்கு முன்னர் மழைநீர் வழிந்தோட வடிகாலமைப்பு செய்யவேண்டும். வடிகாலமைப்பு செய்யாமல் வீதியை திருத்தம் செய்தாலும் எந்த பிரியோசனமுமில்லை.
எனவே உரிய அதிகாரிகள் இதனை கருத்தில்கொண்டு வடிகாலமைப்பினை செய்வதோடு இந்த வீதியையும் விரைவில் செப்பனிட்டு தருமாறு கேட்கின்றோம் - என்றனர்.
கருத்துகள் இல்லை